உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உயிரியல் பூங்காவை ரசித்த 1,576 சுற்றுலா பயணியர்

உயிரியல் பூங்காவை ரசித்த 1,576 சுற்றுலா பயணியர்

சேலம், ஆடிப்பெருக்கையொட்டி சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் சுற்றுலா பயணியர் கூட்டம் நேற்று அலைமோதியது.காலை, 9:00 மணிக்கு பூங்கா திறக்கப்பட்டது முதலே, சுற்றுலா பயணியர் வரத்தொடங்கினர். அவர்கள், பறவை, விலங்கினங்களை பார்வையிட்டனர். பேட்டரி காரிலும் பூங்காவை சுற்றி பார்த்து ரசித்தனர். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தனர்.இதுகுறித்து பூங்கா வன அலுவலர் கமலநாதன் கூறுகையில், ''பூங்காவை, 1,576 பேர் சுற்றிப்பார்த்தனர். இதன்மூலம், 70,000 ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைத்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி