உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரவுடிகள் வீட்டில் குண்டு வீசியதாக 6 பேர் கைது

ரவுடிகள் வீட்டில் குண்டு வீசியதாக 6 பேர் கைது

ஓமலுார், : சேலம் மாவட்டம், ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 24. பொட்டியபுரம், ஆசாரிப்பட்டறையை சேர்ந்தவர் விஸ்வநாதன், 21. ரவுடிகளான இருவரும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன், அவர்களிடையே பணம் பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு பிரிந்தனர்.கடந்த, 10ல் இருவரது வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பன்னீர்செல்வம் தந்தை அன்பழகன் புகார்படி, நேற்று பொட்டியபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன், 21, கருப்பூர் அஜித், 21, மல்லக்கவுண்டனுாரை சேர்ந்த பெரோஸ், 34, திருப்பூர், போயம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ், 32, ஒரு சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அதேபோல் விஸ்வநாதன் சகோதரர் சுரேஷ் புகார்படி, ராஜா என்பவரை கைது செய்தனர்.முன்விரோதத்தில் நடந்த பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை