உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 80 கிலோ ஒயர் திருட்டு 6 பேருக்கு காப்பு

80 கிலோ ஒயர் திருட்டு 6 பேருக்கு காப்பு

சேலம், சேலம் ரயில்வே ஸ்டேஷன் எலக்ட்ரிக்கல் பிரிவு அலுவலக பகுதியில் இருந்த, 80 கிலோ காப்பர் ஒயர்களை, சமீபத்தில் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து சேலம் ஆர்.பி.எப்., போலீசார் வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து கமிஷனர் சவுரவ்குமார் தனிப்படை அமைத்தார். அவர்கள் விசாரணையில் சேலம், தாதம்பட்டி காந்தி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், 47, வாழப்பாடி, நீர்முள்ளிக்குட்டை செல்வம், 32, அம்மாபேட்டை, நஞ்சம்பட்டி சங்கர், 33, கனகராஜ், 32, அம்மாபேட்டை சித்தேஸ்வரா பகுதி மலரவன், 30, சதீஷ்குமார், 32, ஆகியோர் திருடியது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர்களை கைது செய்த போலீசார், ஒயர்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ