உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பள்ளிகளில் 91 சத்துணவு பணியிடங்கள் காலி கூடுதல் பணியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலம்

அரசு பள்ளிகளில் 91 சத்துணவு பணியிடங்கள் காலி கூடுதல் பணியால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவலம்

பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி ஒன்றியத்தில், 63 அரசு பள்ளிகளில் சத்துணவு கூடம் செயல்படுகிறது. அதற்கு சத்துணவு அமைப்பாளர், 60, சமையலர், 60, சமையல் உதவியாளர், 60 என, 180 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.தற்போது, 25 அமைப்பாளர், 51 சமையலர், 13 சமையல் உதவியாளர் என, 89 பணியாளர்கள் மட்டும் பணியில் உள்ளனர். 35 அமைப்பாளர், 9 சமையலர், 47 சமையல் உதவியாளர் என, 91 பணியிடம், 8 ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் தரமான உணவு தயாரித்து சரியான நேரத்துக்கு வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. கூடுதல் பணிச்சுமையால், பணியாளர்களும் மன உளச்சலுக்கு ஆளாகின்றனர்.ஒரு சத்துணவு அமைப்பாளருக்கு, 2க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம் ஓட்ட தெரியாத பெண் பணியாளர்கள், ஓரிடத்தில் இருந்து மற்றொரு சத்துணவு கூடத்துக்கு சரியான நேரத்துக்கு சென்று, உணவு சமைப்பதை கவனிக்க முடிவதில்லை.உடல் நலம் பாதிக்கப்பட்டு பணியாளர்கள் விடுப்பு எடுத்தால் அந்த கூடத்துக்கு மாற்று பணியாளர்களை அனுப்ப முடிவதில்லை. அவசரத்துக்கு கூட பணியாளர்களுக்கு விடுப்பும் கிடைப்பதில்லை. மேலும் பல பணியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளதால் காலி பணியிட எண்ணிக்கை உயரும் நிலை உள்ளது.காலி பணியிடங்களை நிரப்பாததால் மதிய உணவு திட்டம் தரமான முறையில் செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் காலி பணியிடத்தை நிரப்ப, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ