உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை பகுதியில் சிக்கிய நாயை மீட்க முயற்சி

மேட்டூர் அணை பகுதியில் சிக்கிய நாயை மீட்க முயற்சி

மேட்டூர்:மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 1.30 லட்சம் கன அடியாக சரிந்த நிலையில் அப்படியே வெளியேற்றப்படுகிறது. கடந்த 30ல் மேட்டூர் அணை, 16 கண் மதகு முன் உள்ள பாறைகள் இடையே, இறந்து கிடந்த மீன்களை சாப்பிட ஒரு நாய் சுற்றி திரிந்தது.அப்போது உபரிநீர் திறப்பால் தண்ணீர் சூழ்ந்து, அந்த கறுப்பு நிற நாய் அங்கிருந்து செல்ல முடியாமல் பாறையில் தஞ்சம் அடைந்தது. இதுகுறித்து வீடியோ வெளியானதால், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, அந்த நாய்க்கு உணவு வழங்கி, மீட்க, மேட்டூர் தீயணைப்பு துறையினருக்கு அறிவுறுத்தினார். தீயணைப்பு வீரர்கள், 'டிரோன்' மூலம் நாய் இருந்த இடத்தில் உணவை போட்டனர்.டிரோனை விட எடை அதிகமாக இருப்பதால், அந்த கருவி மூலம் நாயை மீட்க முடியவில்லை. நீர்வரத்து சற்று குறைந்ததும், நாயை மீட்கும் பணி நடக்கும் என, வீரர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !