உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்கள் வாலிபால் சென்னை முதலிடம்

பெண்கள் வாலிபால் சென்னை முதலிடம்

சேலம் : மாநில அளவில், பெண்கள் வாலிபால் போட்டி சேலம், மரவனே-ரியில், கடந்த, 5ல் தொடங்கியது. சேலம் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் நடந்த போட்டியில் தமிழக போலீஸ் உள்பட, 6 அணிகள் மோதின. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் தமிழக போலீஸ் துறை - சென்னையின் ஜே.பி.ஆர்., அணிகள் மோதின. முடிவில் அதிக புள்ளிகள் பெற்ற ஜே.பி.ஆர்., அணி வெற்றி பெற்றது. அந்த அணிக்கு, சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலர் சண்முகம், ஆலோசகர் விஜயராஜா, தமிழக கைப்-பந்து கழக பொதுச்செயலர் மார்ட்டின் சுதாகர் ஆகியோர், 25,000 ரூபாய், கோப்பை வழங்கினர். சென்னை, போலீஸ் துணை அணிக்கு, 20,000 ரூபாய், மூன்றாம் இடம் பிடித்த, சென்னை எஸ்.டி.ஏ.டி., அணிக்கு, 18,000 ரூபாய், கோப்பைகளுடன் வழங்-கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி