உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆத்துக்காடு பாலம் கட்டும் பணியை 4 மாதத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு

ஆத்துக்காடு பாலம் கட்டும் பணியை 4 மாதத்தில் முடிக்க கலெக்டர் உத்தரவு

வீரபாண்டி: வீரபாண்டி வட்டாரத்தில் ஊரக வளர்ச்சி முகமையில், 6.82 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். அதன்படி உத்தமசோழபுரம் ஊராட்சி ஆத்துக்காட்டில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே நபார்டு திட்டத்தில், 5.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால பணியை பார்வையிட்டார். அப்போது பணியாட்கள் இல்லாததோடு, துாண்கள் மட்டும் அரைகுறையாக கட்டப்பட்டிருந்தன.இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சேகரிடம் கடிந்து கொண்ட கலெக்டர், எப்போது பணி தொடங்கியது, எப்போது முடிப்பீர்கள், பணியாட்கள் எங்கே, ஒப்பந்ததாரர் யார் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார். துாண்களில் இணைக்கப்பட்டுள்ள கம்பிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்த அவர், 4 மாதங்களுக்குள் கட்டுமான பணியை முடிக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து, வீரபாண்டி, அக்கரபாளையம், எட்டிமாணிக்கம்பட்டி, முருங்கப்பட்டி, மூடுதுறை ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்வரி, வீரபாண்டி ஒன்றிய கமிஷனர் சந்திரமலர், பி.டி.ஓ., தனபால் (கி.ஊ.,) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை