உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 700 மாணவருக்கு ஒரே உடற்கல்வி ஆசிரியர் அரசாணையை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

700 மாணவருக்கு ஒரே உடற்கல்வி ஆசிரியர் அரசாணையை ரத்து செய்ய ஆர்ப்பாட்டம்

சேலம் : சேலம், கோட்டை மைதானத்தில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கங்கள் சார்பில் மண்டல அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சேலம் கல்வி மாவட்ட தலைவர் தேவபிரபு தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலர் பெரியதுரை பேசியதாவது: 700 மாணவர்-களுக்கு ஒரே உடற்கல்வி ஆசிரியர் என அரசாணை வெளியிட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதை உடனே ரத்து செய்ய வேண்டும். பகுதி நேரமாக பணி அமர்த்தப்பட்ட, 5,500 உடற்-கல்வி ஆசிரியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உடற்கல்வி படித்தவர்களுக்கு, 30 ஆண்டாக வேலை கிடைக்க-வில்லை. தமிழகத்தில், 22,000 தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள் தலா, 7,000 என, 36,000 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தால் அனைவருக்கும் வேலை கிடைக்கும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மாணவர்களுக்கு விலையில்லா உடற்கல்வி புத்தகம், சீருடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், விளையாட்டு சார்ந்த பணிகள் தவிர பிற பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில் சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை