உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மின் கோபுரத்தில் பெண் உடல் வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா?

மின் கோபுரத்தில் பெண் உடல் வெள்ளத்தில் சிக்கி இறந்தாரா?

மேட்டூர்:மேட்டூர், சேலம் கேம்ப் பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 57. இவர், தங்கமாபுரிபட்டணத்தில் சிறிய அளவிலான உணவகம் வைத்துள்ளார். இவரது மனைவி கவிதா, 47. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு கவிதா, சேலம் கேம்ப்பில் உள்ள மாடி லைன் விநாயகர் கோவில் அருகே மேட்டூர் அணை உபரிநீர் செல்வதை பார்க்கப் போவதாக கூறி சென்றார்.ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இரவு முழுதும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 9:00 மணிக்கு, விநாயகர் கோவில் அருகே உபரி நீர் ஓடையில் உள்ள மின் கோபுரத்தில் பெண் இறந்து, உடல் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டபோது, அது கவிதா என தெரிந்தது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தாரா என, கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை