உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / டாஸ்மாக் கடையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

டாஸ்மாக் கடையில் தகராறு தொழிலாளி அடித்து கொலை

சேலம்: சேலம், டாஸ்மாக் கடையில் நடந்த தகராறில், தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார்.சேலம், கருப்பூர் மஞ்சுளாம்பள்ளத்தை சேர்ந்தவர் சக்திவேல், 47, கூலி தொழிலாளி. கடந்த, 15 இரவு டால்மியா போர்டு அருகில் உள்ள டாஸ்மாக் கடையில், அவரது நண்பர் மேட்டுபதி பகு-தியை சேர்ந்த மாரிமுத்து, 42, என்பவருடன் மது குடித்து கொண்-டிருந்தார். அப்போது அங்கு வந்த வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பூபாலன், 38, அவரது நண்பர் விக்னேஷ், 26, ஆகியோர் மாரிமுத்து மற்றும் சக்திவேலிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர்.மேலும் தனது அத்தையுடன் தகாத உறவில் இருப்பதாக கூறி, பூபாலன் மாரிமுத்துவை தாக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க வந்த சக்திவேலை தள்ளி விட்டார். அதில் அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் காலை, நீண்ட நேரமா-கியும் சக்திவேல் நினைவு திரும்பாமல் இருந்ததால், அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூபாலன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்-தனர்.இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரி-ழந்தார். இதனால், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை