உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கதவணை திறப்பு 2 நாள் குடிநீர் கட்

கதவணை திறப்பு 2 நாள் குடிநீர் கட்

இடைப்பாடி: இடைப்பாடி நகராட்சியில், 60,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு பூலாம்பட்டியில் உள்ள காவிரியாற்றில் இருந்து இரு நீரேற்று திட்டங்கள் மூலம் தினமும், 65 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது.பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் இருந்து இடைப்பாடிக்கு குடிநீர் எடுப்பதால் பற்றாக்குறை வராது. ஆனால் கதவணை, மே மாதத்தில் ஷட்டர் பராமரிப்புக்கு திறக்கும்போது நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.அதன்படி இன்று தண்ணீர் திறக்கப்படுவதால் இடைப்பாடி நகராட்சி நீரேற்றும் பகுதியில் தண்ணீரின்றி இன்று முதல் குடிநீர் நீரேற்றம் செய்யப்படவில்லை. இதனால் இன்று, நாளை, நகராட்சியில் குடிநீர் வினியோகம் இருக்காது. அதேபோல் பூலாம்பட்டியில் இருந்து குடிநீர் எடுக்கப்படும் அதன் டவுன் பஞ்சாயத்து, சேலம் இரும்பாலைக்கும், 2 நாட்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை