உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஊசி போட்டதில் மாணவர் பலி மருந்து கடை உரிமையாளர் கைது

ஊசி போட்டதில் மாணவர் பலி மருந்து கடை உரிமையாளர் கைது

ஆத்துார்:சேலம் மாவட்டம் ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்த ஜெகதீஷ் மகன் கீர்த்திவாசன், 13. அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த மார்ச், 21ல் உடல் நிலை சரியின்றி, அதே பகுதியில் உள்ள மருந்து கடைக்கு பெற்றோர் அழைத்துச்சென்றனர்.அப்போது மெடிக்கல் உரிமையாளரான, கெங்கவல்லி அருகே நடுவலுார், வடகோடியை சேர்ந்த செந்தில்குமார், 40, மாணவருக்கு ஊசி போட்டார். அதில் மாணவருக்கு வீக்கம் ஏற்பட்டு உடல் நிலை மோசமாகி, மார்ச், 25ல் உயிரிழந்தார். மாணவரது பெற்றோர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார், சந்தேக மரண வழக்கு பதிந்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில், தவறான மருந்து செலுத்தி ஊசி போட்டதால் மாணவர் இறந்தது தெரிந்தது. இதனால் போலீசார் செந்தில்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை