உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைப்பயிர் துறை மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்

மலைப்பயிர் துறை மூலம் விவசாயிகள் பயன் பெறலாம்

மேட்டூர்: கொளத்துார் வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை, மலைப்பயிர்கள் துறை மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்.தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் சார்பில், 2024 - 25ம் நிதியாண்டில் காய்கறி பயிர் குழித்தட்டு நாற்றுகள் பழச்செடிகள், முழு மானியத்தில் வழங்கப்படுகின்றன. மா அடர் நடவு பரப்பு விரிவாக்கம் திட்டத்தில் அல்போன்சா, பெங்களூரா, நடுசாலை, செந்துாரா போன்ற மா ஓட்டு செடிகள், பெத்தநாயக்கன்பாளையம், கருமந்துறை அருகே அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் மணியார்குண்டம் பண்ணையில் தயாராக உள்ளன. அதனால் மா சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், கொளத்துார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.மேலும் பரப்பு விரிவாக்க திட்டத்தில் தக்காளி, மிளகாய், கத்தரி குழித்தட்டு நாற்றுகள், குண்டுமல்லி பதியன்கள், டிராகன் பழச்செடிகள், சின்னவெங்காயம் விதை, மஞ்சள், திசு வாழைக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. வாழைத்தார்களுக்கு பழ உறை, தேன்பெட்டிகள், நிலப்போர்வை, மண்புழு, உரப்படுக்கை உள்ளிட்ட உபகரணங்களும் வழங்கப்படுகின்றன. பந்தல் சாகுபடி, காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிரந்தர கல்பந்தல் அமைக்கப்படும். சின்னவெங்காயம் சேமிப்பு கிடங்கு அமைக்க, பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. நடப்பாண்டு மழை குறைந்த நிலையில், இருக்கும் பாசன நீரை உரிய முறையில் பயிர்களுக்கு உபயோகிக்க நுண்ணீர் பாசன முறையை விவசாயிகள் பின்பற்றலாம். மேலும் சாகுபடி தொடர்பான ஆலோசனைக்கு, விவசாயிகள், கொளத்துார் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்