உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிட்னி தானம் கிடைப்பது எளிதல்ல நுால் வெளியீட்டு விழாவில் தகவல்

கிட்னி தானம் கிடைப்பது எளிதல்ல நுால் வெளியீட்டு விழாவில் தகவல்

சேலம் : சேலம், இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில், கோபி சிறுநீரக மருத்துவமனை சார்பில், 'சிறுநீரக பாதிப்புகள், கேள்விகளும், பதில்களும்' நுால் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. நுாலாசிரியரில் ஒருவரான ஹரிஜானகிராமன் வரவேற்றார். சேலம் மருத்துவ பணி சுகாதார இணை இயக்குனர் ராதிகா தலைமை வகித்து நுாலை வெளியிட, இந்திய மருத்துவ சங்க, தேசிய முன்னாள் துணைத்தலைவர் பிரகாசம் பெற்றுக் -கொண்டார்.தொடர்ந்து பிரகாசம் பேசியதாவது: தமிழகத்தில் கிட்னி தானத்தை எதிர்பார்த்து ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். அதில் ஏகப்பட்ட விதிமுறை, சட்ட சிக்கல் உள்ளதால் கிட்னி தானம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு வெளியிடப்-பட்ட புத்தகத்தில், சிறுநீரக பாதிப்பு வராமல் இருக்க மேற்-கொள்ள வேண்டிய நடவடிக்கை, பாதிப்பு வந்தால் அதிலிருந்து மீள்வதற்கான சிகிச்சை முறை, நோயாளிகளின் பல்வேறு கேள்வி, சந்தேகங்களுக்கு எளிய தமிழில் பதில் அளிக்கப்பட்டுள்-ளன. அனைவரும் வாங்கி படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகங்-களில் இதுவும் ஒன்று. இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நுாலாசிரியர்கள் ஜோன்ஸ் ரொனால்ட், ஹரிஜானகி ராமன் பேசினர். சங்க சேலம் கிளை தலைவர் சாதுபகத்சிங், பொரு-ளாளர் நரேந்திரன் உள்பட மருத்துவர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை