மேலும் செய்திகள்
சாதனை படைத்த Australia
23-Feb-2025
ஆத்துார் : தலைவாசல் அருகே கடத்தப்பட்ட பிளஸ் 2 மாணவியை, திருமண கோலத்தில் தனிப்படை போலீசார் மீட்டனர்.சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூரை சேர்ந்த, 17 வயது பிளஸ் 2 மாணவி, கடந்த, 1ம் தேதி இரவு மாயமானார். ராசிபுரத்தைச் சேர்ந்த ஒருவருடன் சிறுமி பழகிய நிலையில், சிறுமியை காரில் கடத்தியது தெரியவந்தது.சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில், அவரை கடத்திச் சென்ற கார் இருப்பது தெரிந்து, சிறுமியின் பெற்றோர் சென்றனர். அப்போது, காருடன் கும்பல் தப்பியது. தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் சிறுமியை தேடினர்.இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே மெட்டாலாவில் உள்ள ஒரு கோவிலில், சிறுமி இருப்பது தெரிந்து, தனிப்படை போலீசார் நேற்று விரைந்தனர். திருமணம் முடிந்த நிலையில், சிறுமி மற்றும் தாலி கட்டிய நபரை பிடித்த போலீசார், ஆத்துார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.
23-Feb-2025