| ADDED : மே 26, 2024 07:05 AM
சேலம் :நாளை, 5 மாவட்டங்களில் பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது.இதுகுறித்து மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சந்தீப் சிங் நேகி அறிக்கை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து சேலம் மண்டலத்தில் நாளை, குறைதீர் கூட்டம் நடத்த உள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம் சுவாமி சர்வதேச பள்ளி; ஈரோட்டில் பெருந்துறை ஆர்.டி., ஓட்டல்; தர்மபுரியில், எஸ்.பி., அலுவலகம் எதிரே, ஸ்ரீரங்கா டிபார்ட்மென்டல் ஸ்டோர் கிளை; நாமக்கல்லில் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நாமக்கல் கிளை கூட்ட அரங்கு; கிருஷ்ணகிரியில் ஓசூர் தொழில் சங்க கூட்ட அரங்கில் நடக்க உள்ளது.குறிப்பாக காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி; மதியம், 2:00 முதல், மாலை, 5:45 மணி வரை, இரு அமர்வாக கூட்டம் நடக்க உள்ளது. இதில் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்புக்கு உட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எப்., அட்வான்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.