உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜிவி பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாம்பியன்

ஜிவி பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் சாம்பியன்

மேட்டூர்: மேச்சேரி மைய அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கு தடகள போட்டி, கொளத்துார் அரசு மாதிரி பள்ளி மைதானத்தில் நடந்-தது.அதில் -மேட்டூர், மாசிலாபாளையம், 'ஜிவி' மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 19 தங்கம், 21 வெள்ளி, 9 வெண்கலம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.இதன்மூலம், 4ம் முறை சாம்பியன் ஆப் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர். மேலும் பள்ளி மாணவர் இளம்பிறை அன்பு, முதன்மை சாம்பியன்ஷிப் பட்டம், மாணவர்கள் கபில், சுதர்ஷன், மாணவி தன்ஷிகா தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றும், பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பா.ம.க.,வை சேர்ந்த, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம், பதக்கம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவர்கள், பயிற்சி அளித்த உடல்-கல்வி ஆசிரியர்களை, தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் ராஜலிங்கம், இயக்குனர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ