உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைவினை பொருள் கண்காட்சி துவக்கம்

கைவினை பொருள் கண்காட்சி துவக்கம்

சேலம், கைவினைப்பொருள் அபிவிருத்தி ஆணையம், இந்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம், மதுரை சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து, 'காந்தி சில்ப் பஜார்' பெயரில், அகில இந்திய கைவினைப்பொருள் கண்காட்சி, விற்பனை தொடக்க விழாவை, சேலம், தெய்வீகம் திருமண மண்டபத்தில் நேற்று நடத்தின. சென்னை நபார்டு துணை பொது மேலாளர் கணேசன் தலைமை வகித்தார். சேலம் மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, 'கிராப்ட்' கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ஸ்டாலையும் பார்வையிட்டார். இதில் கலை உலோக பொருட்கள், ஜரி வேலைப்பாடு, எம்பிராய்டரி ஆடை, நார் பொருட்கள், மெழுகுவர்த்தி வகைகள், பிரம்பு மூங்கில், கடல் சிப்பி, சணல், மரத்திலான பொருட்கள், செயற்கை நகைகள், பனை, ஓலைப்பொருட்கள், சுங்குடி சேலைகள், மண்பாண்ட பொருட்கள், தரை விரிப்புகள், ஜவுளி வகைகள் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. உற்பத்தியாளர்களின் நேரடி விற்பனை என்பதால் விலை குறைவாக உள்ளது. இக்கண்காட்சி விற்பனை, வரும், 18 வரை நடக்கிறது. மதுரை சிறு தொழில் மேம்பாட்டு நிறுவன பொது மேலாளர் பழனிவேல் முருகன், சேலம் நபார்டு உதவி பொது மேலாளர் சீபா சங்கீதா, மேலாளர்கள் நர்மதா, ரமேஷ், 50 பாரம்பரிய மிக்க கைவினை கலைஞர்கள், குழுமத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர், மாநில, தேசிய விருது பெற்ற கைவினை கலைஞர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ