சேலம்: சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி அறுபடை வீடு மருத்துவமனை வளாகம்; சென்னை பையனுாரில் உள்ள அறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகத்தில் உள்ள அலைடு ெஹல்த் சயின்ஸ் துறைகளின் சிறப்பம்சங்கள் குறித்து, டீன் செந்தில்குமார் கூறியதாவது:மயக்க மருந்தியல், இருதய பரிசோதனை, மருத்துவ ஆய்வகம், இருதய அறுவை சிகிச்சை, ரத்த சுத்திகரிப்பு, கண் ஒளியியல், அறுவை அரங்கப்பிரிவு, நரம்பியல், கதிரியக்கம், மருத்துவ உதவியாளர், அவசர சிகிச்சை, தடய அறிவியல் பிரிவுகள் உள்ளிட்ட இளங்லை படிப்புகளும், அதன் சார்ந்த முதுகலை படிப்புகளும் வழங்கப்படுகின்றன. கதிரியக்கவியல், மருத்துவ ஆய்வக பிரிவு, மயக்கவியல் போன்ற பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.டிஜிட்டல் தொழிற்நுட்பம் சார்ந்த நுாலகம், கற்றல் வசதி, தொழிற்துறை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படி, துறை ரீதியான கூடுதல் சான்றிதழ் படிப்புகள், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் எளிதாக வேலைவாய்ப்பை பெற பன்மொழி திறனான, இந்தி, ஆங்கிலம், ஜெர்மன், ஜாப்பனிஸ் பயிற்சி, ஆய்வக வசதி, அரசு சார்ந்த கூடுதல் சான்றிதழ் படிப்புகள் உள்ளிட்ட கல்வியியல் சார்ந்த வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளோம். தவிர தமிழர்களின் கலையான நாட்டுப்புற கலை, இசை, ஓவியம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கிறோம். விளையாட்டு திறன் சார்ந்த பயிற்சியும் வழங்கி வருகிறோம். வருமானத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு அன்னபூரணி கல்வி ஊக்கத்தொகை, சண்முகசுந்தரம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பன்னாட்டு மருத்துவமனைகள், மருத்துவ துறை சார்ந்த மென்பொருள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.