உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மரம் வெட்டி கடத்தல்: வருவாய்த்துறை விசாரணை

மரம் வெட்டி கடத்தல்: வருவாய்த்துறை விசாரணை

சங்ககிரி: சங்ககிரி, அக்ரஹார தேர்வீதியில் கிருஷ்ணர் கோவில் உள்ளது. அதன் அருகே, 50 ஆண்டு பழமையான அரச மரம் இருந்தது. அதையொட்டி வேப்ப மரமும் இருந்தது. அந்த மரங்களை, கடந்த, 26ல் மர்ம நபர்கள் வெட்டி கடத்திவிட்டதாக, மக்கள் குற்றம்சாட்டினர். அரசு அனுமதியின்றி மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் வலியுறுத்தினர்.இதுகுறித்து சங்ககிரி தாசில்தார் வாசுகி கூறுகையில், ''விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை