உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மக்களை தேடி மருத்துவம்:10.43 லட்சம் பேர் பயன்

மக்களை தேடி மருத்துவம்:10.43 லட்சம் பேர் பயன்

சேலம்: சேலம் கலெக்டர் அலுவலகத்தில், மக்களை தேடி மருத்துவ திட்டம், 4வது ஆண்டு தொடக்க-விழா நேற்று நடந்தது. இத்திட்டத்தில் பணியாற்-றிய டாக்டர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்-களை ஊக்கப்படுத்தி, சான்றிதழ் வழங்கி பாராட்-டிய கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில்,''இத்-திட்டம் தொடங்கியது முதல், உயர்ரத்த அழுத்தம் உள்ள, 4,99,531 பேர், நீரிழிவு நோயா-ளிகள் 2,38,721 பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகள், 2,47,052 பேர், நோய் ஆதரவு சிகிச்சை சேவை பெற்ற, 22,328 பேர், இயன்முறை சிகிச்சை பெற்ற 36,214 பேர், மூன்று சிறுநீரக நோயாளிகள் என மொத்தம் 10,43,849 பேர் பயன் பெற்றுள்ளனர். ஒரு வட்டாரத்துக்கு தலா, ஒரு மருத்துவ வாகனம் வீதம், 24 வாகனங்கள் பயன்-பாட்டில் உள்ளது,'' என்றார்.முன்னதாக, மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, மக்களை தேடி மருத்துவ வாகனங்கள் பயன்பாடு-களை நேரில் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி