உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.எல்.ஏ., டிரைவர் மகன் உடல் மீட்பு

எம்.எல்.ஏ., டிரைவர் மகன் உடல் மீட்பு

சேலம்:சேலம் மாவட்டம் தாரமங்கலம், அமரகுந்தியை சேர்ந்தவர் செல்வம். இவர், ஓமலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மணியின் கார் டிரைவர். இவரது மகன் வெங்கடேசன், 33. சேலம் அருகே தனியார் போக்குவரத்து நிறுவன ஊழியர். நிறுவன உரிமையாளர் ராமச்சந்திரனுக்கு, கன்னங்குறிச்சியில் நிலம் உள்ளது. அங்கு நடக்கும் கட்டுமானப் பணிகளை, இரு மாதங்களாக வெங்கடேசன் மேற்பார்வை செய்து வந்தார். கடந்த 22ம் தேதி அங்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை செல்வம், கன்னங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்த நிலையில், கன்னங்குறிச்சியில் உள்ள ஒரு கிணற்றில் வெங்கடேசன் உடல் மிதந்தது நேற்று முன் தினம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை