உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அன்னை ஆலய தேர் பவனி

அன்னை ஆலய தேர் பவனி

மேட்டூர், ஆக., 15ல் மேட்டூர் துாய விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் பிரார்த்தனை கூட்டம், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடக்கும். அதன்படி நேற்று பிரார்த்தனை நடந்தது. திரளானோர் பங்கேற்றனர். இரவு, 7:00 மணிக்கு ஆலயத்தில் இருந்து விண்ணேற்பு அன்னை தேர் புறப்பட்டது. பங்குத்தந்தை இருதய செல்வன், உதவி பங்குத்தந்தை பிரான்சிஸ் சேவியர் முன்னிலையில் தேர், கடைவீதி, சதுரங்காடி, கிழக்கு பிரதான சாலை வழியே ஆலயத்தை அடைந்தது. புனித ஜெயராக்கினிஆத்துார், ராணிப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில், கடந்த, 4ல் திருப்பலி நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. நேற்று இரவு, 8:00 மணிக்கு கப்பல் வடிவமைப்பில் இருந்த தேரில் புனித ஜெயராக்கினி அன்னை, மின்னொளி அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியே திருவீதி உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை