உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காற்றால் 3,000 வாழை சேதம் அதிகாரிகள் கணக்கெடுப்பு

காற்றால் 3,000 வாழை சேதம் அதிகாரிகள் கணக்கெடுப்பு

இடைப்பாடி: சங்ககிரி, தேவூர் அருகே நேற்று முன்தினம் சூறைக்காற்று வீசியது. இதில் கோனேரிப்பட்டி அக்ரஹாரம், பூச்சமரத்துக்காடு பகுதியை சேர்ந்த விவசாயி சுப்ரமணிக்கு சொந்தமான, 590 வாழை மரங்கள் சாய்ந்தன. அதே பகுதியில் முருகேசனின், 570 தேன் வாழை; தண்ணிதாசனுாரில் முரளியின், 800 வாழை, வெங்கடாசலத்தின், 800 வாழை, ஜீவானந்தத்தின், 500 வாழை என சுற்றுவட்டார பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்து, விவசாயிகளும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தேவூர் வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி தோட்டக்கலை துறை அலுவலர் விஜயவர்மன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், சேதம் அடைந்த தோட்டங்களை பார்வையிட்டு, அதன் மதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை