உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஆடி பிறப்பையொட்டி மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

ஆடி பிறப்பையொட்டி மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாட்டம்

சேலம்: சேலம் மாவட்டத்தில், ஆடி பிறப்பையொட்டி மக்கள் தேங்காய் சுட்டு கொண்டாடினர்.தமிழ் மாதமான ஆடி பிறப்பையொட்டி, சேலம் மாநகர, மாவட்-டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகை, மகாபாரத கதையுடன் தொடர்பு உடையதாக கூறப்படுகிறது. இந்த நாளில் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை பூஜை செய்து மக்கள் வழிபட்டனர்.இதற்காக கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, செவ்வாய்-பேட்டை, அன்னதானப்பட்டி, 4 ரோடு, அழகாபுரம், சூரமங்-கலம் உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் தேங்காயில் உள்ள நார்-களை அகற்றி, அதன் கண்ணில் துளையிட்டு தண்ணீரை வெளி-யேற்றினர். துளையிட்ட கண்ணின் வழியாக பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவுல், எள், ஏலக்காய் கலந்த கலவையை இட்டனர். பின் நீண்ட முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் தேங்-காயை சொருகினர். குச்சியை சுற்றி மஞ்சளை பூசி, துளையை மூடி, வீடுகளுக்கு முன் நெருப்பு மூட்டி தேங்காயை மக்கள் சுட்-டனர். தொடர்ந்து அப்படி சுட்ட தேங்காயை சுவாமிக்கு வைத்து மக்கள் வழிபாடு செய்தனர். இதனிடையே அழிஞ்சிமர குச்சிகள் சேலம் ஆனந்தா பாலம், செவ்வாய்பேட்டை காய்கறி மார்க்கெட், வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகள் உள்பட பல்வேறு இடங்களில் விற்பனைக்-காக குவிக்கப்பட்டு இருந்தன. இதை, 15 முதல், 30 ரூபாய் வரை கொடுத்து மக்கள் வாங்கி சென்றனர்.மேலும் தேங்காய், பழம், பூ, பொட்டுக்கடலை விற்பனை அதிக-ரித்து காணப்பட்டது. இவ்வாறு தேங்காய் சுடும் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் இருந்தே கொண்டாட்டம் களைகட்டியது.* இடைப்பாடி பகுதிகளில் உள்ள கவுண்டம்பட்டி, வெள்ளாண்-டிவலசு மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெண்களும், குழந்தைகளும் தேங்காய் சுட்டு மகிழ்ந்-தனர்.* ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ஆடி மாத பிறப்பையொட்டி நேற்று, ஆத்துார் வெள்ளை விநாயகர், பெரிய மாரியம்மன், காந்தி நகர் முத்துமாரியம்மன், வடசென்னி-மலை பாலசுப்ரமணியர், ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் உள்-ளிட்ட கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தது. இதில், புது மண தம்பதியர் கோவிலில் வழிபட்டனர். ஆடி பிறப்பை கொண்-டாடும் வகையில் வீடுகளில் தேங்காய் சுட்டு, குடும்பத்தினர், உற-வினர்களுக்கு கொடுத்து கொண்டாடினர்.அழிஞ்சு குச்சி விற்பனை பாதிப்புஆடி மாத பிறப்பையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேங்காய் சுடும் பண்டிகை விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தேங்-காயின் கண் பகுதியில் துளையிட்டு அதில் அவுல், வெல்லம் உள்-ளிட்டவை நிரப்பி தேங்காயை அழிஞ்சி குச்சியில் வைத்து தீ மூட்டி சுடுவர். இதற்காக அழிஞ்சி குச்சி, தேங்காய் விற்பனை செய்வது வழக்கம். ஆத்துார், ராணிப்பேட்டை, கடை வீதி பகு-தியில் அழிஞ்சி குச்சி, தேங்காய், அவுல், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை முதல் மழை பெய்ததால், விற்பனை பாதித்துள்ளதாக வியாபா-ரிகள் தெரிவித்தனர்.* வாழப்பாடி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை, 6:00 முதல் 10:00 வரை மிதமான மழை பெய்தது. அழிஞ்சு குச்சி, தேங்காய் விற்பனை செய்ய, வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகு-தியில் சாலையோரம் கடை அமைத்த வியாபாரிகள், மழையில் நனைந்தபடி வியாபாரம் செய்ய முடியாமல் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ