உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வாரம் ஒருமுறை செலவு விபரம் ஒப்படைக்க உத்தரவு

வாரம் ஒருமுறை செலவு விபரம் ஒப்படைக்க உத்தரவு

ஓமலுார்;ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சேலம் லோக்சபா தொகுதி, தேர்தல் செலவின பார்வையாளர் ராஜீ சங்கர் கிட்டூர் தலைமை வகித்தார்.அதில் அனைத்து கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் செலவு விபரங்களை கணக்கிட்டு, வாரம் ஒருமுறை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்; வீடியோ பதிவு செய்யும் குழுவினர், கட்சிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும், தெளிவான வீடியோ பதிவு செய்ய வேண்டும்; தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகனங்களை முழுமையாக சோதனையிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.ஓமலுார் சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள், செலவின குழு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ