உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மேட்டூர் அணை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம்

மேட்டூர் அணை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு போராட்டம்

சேலம்: மேட்டூர் அணை இன்று(ஜூலை 27) காலை 9.15 மணிக்கு 100 அடியை எட்டியது. அப்போது சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் நீர்வளத்துறை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனர். மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் மற்றும் தி.மு.க.,வினர் கலந்து கொள்ளவில்லை.இதனை கண்டித்து இன்று காலை மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் அணை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டார். பாமக நிர்வாகிகள் மேட்டூர் கொளத்தூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அணை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் ஆகியோரை பணி மாற்றம் செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை