உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கத்தியை காட்டி மிரட்டிய பணியாளரிடம் விசாரணை

கத்தியை காட்டி மிரட்டிய பணியாளரிடம் விசாரணை

சேலம்: சேலம், எருமாபாளையத்தை சேர்ந்த ரவிசங்கரின் மனைவி திவ்யா, 27. இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், நேற்று காலை சேலம் அரசு மருத்துவமனை வந்து சிகிச்சை முடித்து, மருந்து சீட்டு வாங்க கணவன், மனைவி இருவரும் வரிசையில் நின்றிருந்தனர். அப்போது சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த மாந-கராட்சி துப்புரவு பணியாளர் தனசேகர், 54, என்பவர் வரிசையில் நின்றிருந்தவர்களை வேகமாக செல்லவும் என கூறி சத்தம் போட்-டுள்ளார். இதனால் கோபமடைந்த திவ்யா கணவர், மருத்துவம-னையில் ஏன் சத்தம் போடுகிறீர்கள் என கேட்டதாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த தனசேகர், கத்தியை காட்டி ரவிசங்கர், திவ்யாவை வேகமாக செல்லவும் என மிரட்டியுள்ளார். இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்து, மருத்துவமனை போலீசில் புகார் செய்-தனர். தனசேகரை போலீசார் பிடித்து சென்று கத்தியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ