உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குடியிருப்பில் புகும் மழைநீரை தடுக்க ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

குடியிருப்பில் புகும் மழைநீரை தடுக்க ஓடையில் தடுப்புச்சுவர் கட்ட கோரிக்கை

பனமரத்துப்பட்டி : சேலம் மாவட்டம் ஜருகுமலையில் உற்பத்தியாகும் மழைநீர், நிலவாரப்பட்டி, தாசநாயக்கன்பட்டி வழியே செல்கிறது.கடந்த வாரம் ஜருகுமலையில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நிலவாரப்பட்டியில் ஓடை நிரம்பி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், மழைநீர் புகுந்ததால், 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதேநேரம் ஓடையில் சென்ற மழைநீர், தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதனால் அங்குள்ள ராம் நகர், பாலாஜி நகர், ராஜேஸ்வரி நகர் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். தண்ணீர் குடியிருப்பு பகுதியில் நுழைவதை தடுக்க, ஓடையில், 10 அடி உயரம், 20 மீ., நீளத்தில் தடுப்புச்சுவர் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் வேலுசாமி, நேற்று, வீரபாண்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜமுத்துவிடம் மனு அளித்தார். அவர், 'தொகுதி மேம்பாட்டு நிதியில் தடுப்புச்சுவர் கட்டி தரப்படும். அதற்கு மதிப்பீடு தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை