உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வீடுகளை குறி வைத்து நகை, பணம் கொள்ளை:

வீடுகளை குறி வைத்து நகை, பணம் கொள்ளை:

ஆத்துார்: மூன்று மாவட்டங்களில், பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து நகை, பணம் கொள்ளையடித்து வந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் செங்காட்டை சேர்ந்த பழனிமுத்து மகன் செந்தில், 30. இவர், சென்னையில் ஐ.டி., ஊழியராக பணிபுரிகிறார். கடந்த, 18ல், வீட்டை பூட்டி விட்டு பழனிமுத்து குடும்பத்தினருடன் சென்னை சென்றார். கடந்த, 20ல், வீட்டுக்கு வந்தபோது பீரோ உடைக்கப்பட்டு, 17 பவுன், 18 ஆயிரம் ரூபாய் திருட்டுபோனது தெரியவந்தது. பழனிமுத்து புகார்படி, தம்மம்பட்டி போலீசார் விசாரித்தனர். அதில், நரசிங்கபுரம் விநாயகபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் தேவா, 30, புதுச்சேரி, கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் மகன் ஸ்டீபன் என்ற மணி 27, ஆகியோர் சேர்ந்து, பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து நகை, பணம் கொள்ளையடித்தது தெரியவந்தது. இவர்களை ஆத்துார் தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் பிடித்தனர். நேற்று ஆத்துார் நீதிமன்றத்தில், இருவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இதில் தேவாவை சேலம் மத்திய சிறைக்கும், ஸ்டீபன் என்ற மணியை, ஆத்துாரில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: ஆத்துாரை சேர்ந்த தேவா மீது சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல் மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு, பைக் திருட்டு வழக்குகள் உள்ளன. தம்மம்பட்டி, ஆத்துாரில் நடந்த திருட்டு தொடர்பாக, தனிப்படை போலீசார் ஆத்துாரை சேர்ந்த தேவா, அவரது நண்பரான புதுச்சேரி ஸ்டீபன் என்ற மணி ஆகியோர், பூட்டியிருக்கும் வீடுகளை குறி வைத்து கொள்ளையடித்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.இவர்களை கைது செய்து, 49 பவுன், 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், தம்மம்பட்டிக்கு, 22 பவுன், மங்களபுரம், 9 பவுன் மற்றும் 10 லட்சம் ரூபாய்; கள்ளக்குறிச்சி, 8 பவுன்; ஆத்துார் டவுன் மற்றும் வாழப்பாடிக்கு தலா 5 பவுன் என, மொத்தம், 49 பவுன் அந்தந்த ஸ்டேஷன் வழக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை