உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் லோக்சபா தொகுதி: அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகம்

சேலம் லோக்சபா தொகுதி: அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகம்

ஓமலுார்:சேலம் லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரான, ஓமலுார் அருகே திண்டமங்கலத்தை சேர்ந்த விக்னேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். ஜெ., பேரவை மாநில துணை செயலரான அவரை, அறிமுகப்படுத்தும் கூட்டம் நேற்று, காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி மற்றும் தீவட்டிப்பட்டியில் நடந்தது. ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமை வகித்தார். அதில் வேட்பாளர் விக்னேஷ் பேசியதாவது:வேட்பாளராக வாய்ப்பு அளித்த கட்சி பொதுச்செயலர் இ.பி.எஸ்.,க்கு நன்றி. என்னை வெற்றி பெறச்செய்தால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்டு அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.ஒன்றிய செயலர்கள் சித்தேஸ்வரன், சுப்ரமணியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி