உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் சேலம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் உறுதி

விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் சேலம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் உறுதி

சேலம்: 'இண்டியா' கூட்டணியின் சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, இடைப்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட வீரப்பம்பாளையம், கேட்டுக்கடை, வெள்ளாண்டிவலசு, நைனாம்பட்டி பஸ் ஸ்டாப், வெள்ளார்நாயக்கன்பாளையம், நாச்சிபாளையம், மூப்பனுார், மோட்டூர், கவுண்டம்பட்டி, ஆலச்சம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது:தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், மக்கள் மனதை அறிந்து அவர்களுக்கு மகளிர் உதவித்தொகையாக, ௧,௦௦௦ ரூபாய் வழங்குகிறார்.இந்த தொகை கிடைக்காதவர்களுக்கு தேர்தல் முடிந்ததும் வழங்கப்படும். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதேபோல் அரசு பஸ்களில் சேலத்துக்கு செல்ல வேண்டுமானால் கட்டணமின்றி செல்லும் வசதியை முதல்வர் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.சமீபத்தில் தமிழகத்தில், ௮ மாவட்டங்களில் மழை வெள்ளத்தால், ௩௫ லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன. பிரதமர் வந்து பார்க்கவில்லை. எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கினார்.மத்திய அரசிடம் நிதியை, சும்மா கேட்கவில்லை. 6,௯௦,000 கோடி ரூபாய் வரி கட்டியிருக்கிறோம். அதைத்தான் கேட்கிறார். ஆனால், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., வேடிக்கை தான் பார்த்தார்.மக்களை பற்றிய கவலை அவருக்கு இல்லை. அ.தி.மு.க.,வுக்கு போடும் ஓட்டு, மோடிக்கு போடும் ஓட்டாகத்தான் இருக்கும்.இ.பி.எஸ்., மோடியிடம் தான் செல்வார். அவருக்கு வேறு வழியே இல்லை. அதனால் நமக்கான திட்டங்களை கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும்படி, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெறச்செய்யுங்கள். 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் ஜாதி, மதம் பார்த்தது கிடையாது. ஏழை, பணக்காரன் என பார்த்தது கிடையாது. என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.காங்., மாவட்ட தலைவர் ஜெயக்குமார், தொகுதி பொறுப்பாளர் பரணி, மணி, மாவட்ட துணை செயலர் சம்பத்குமார், இடைப்பாடி நகர செயலர் பாஷா, நகர காங்., தலைவர் நாகராஜன், தி.மு.க., நகர நிர்வாகிகள் மாதையன், வடிவேலு, சாமியப்பன், கீதா முருகன், ராஜா சண்முகம், செந்தில்குமார், ராஜமாணிக்கம், சிங்காரவேலு, ரமேஷ், யூனாஸ், 'இண்டியா' கூட்டணி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி