உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாநில ேஹண்ட்பால் போட்டி காலிறுதிக்கு சேலம் அணி தகுதி

மாநில ேஹண்ட்பால் போட்டி காலிறுதிக்கு சேலம் அணி தகுதி

மேட்டூர் : தமிழ்நாடு கைப்பந்து கழகம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், அருள்நம்பி விளையாட்டு குழுமம் சார்பில், மாநில அளவில், 21வது ேஹண்ட்பால் போட்டி மேட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகம் முழுதும், 50 அணிகள் பங்கேற்றுள்ளன. 2ம் நாளாக நேற்றும் போட்டி நடந்தது. கால் இறுதி போட்டிக்கு, ஆண்கள் பிரிவில், திண்டுக்கல், கோவை, தர்மபுரி, மதுரை, விழுப்புரம், சென்னை, கடலுார், சேலம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.மகளிர் பிரிவில் திருவண்ணாமலை, துாத்துக்குடி, சென்னை, கோவை, தர்மபுரி, பெரம்பலுார், திண்டுக்கல், சேலம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கும், இறுதி போட்டிக்கும் தகுதி பெறும். இன்று இறுதிப்போட்டி நடக்கிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு மொத்தம், 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, கோப்பை வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி