உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சட்டவிரோத மது விற்றால் நடவடிக்கை சோமம்பட்டி ஊராட்சி எச்சரிக்கை

சட்டவிரோத மது விற்றால் நடவடிக்கை சோமம்பட்டி ஊராட்சி எச்சரிக்கை

வாழப்பாடி:சோமம்பட்டியில் சட்டவிரோதமாக மது, புகையிலை பொருட்கள் விற்க தடை விதித்து, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஊராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சோமம்பட்டி ஊராட்சி தலைவராக அ.தி.மு.க.,வை சேர்ந்த பாலசுப்ரமணியன் உள்ளார். ஊராட்சி நிர்வாகம் சார்பில், பணியாளர் ஒருவர், ஆட்டோவில் சென்று ஒலிபெருக்கி மூலம் நேற்று முன்தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.'தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சந்துக்கடைகள் மூலம் சட்டவிரோத மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. இதில் யாரும் ஈடுபடக்கூடாது. மீறி செயல்பட்டால், ஊராட்சி சார்பில் காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஊராட்சி பகுதி முழுதும் இந்த எச்சரிக்கை ஆட்டோ வலம் வந்தது.இதுகுறித்து ஊராட்சிச் செயலர் மகேஸ்வரன் கூறியதாவது: இரு வாரங்களுக்கு முன்பு, வாழப்பாடி டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஊராட்சி தலைவர்களுக்கு கூட்டம் நடந்தது. அதில் சட்டவிரோத குட்கா, மது விற்றால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த 25ல், வாழப்பாடி, சோமம்பட்டி, குறிச்சி பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறித்து, நாளிதழ்களில் செய்தி வெளியானது.இதனால் சோமம்பட்டி ஊராட்சி மக்கள் நலன் கருதி, சட்டவிரோத குட்கா, மது விற்பனையை தடுக்க விழிப்புணர்வு செய்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை