உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குரு பெயர்ச்சியால் சிறப்பு பரிகார யாகம்

குரு பெயர்ச்சியால் சிறப்பு பரிகார யாகம்

சேலம்: குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மதியம் பெயர்ச்சியானார். இதனால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகர ராசிகளுக்கு நன்மை, ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீன ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இதையொட்டி சேலம், கொண்டலாம்பட்டி வேல்முருக சுப்ரமணியர் கோவிலில் தனி சன்னதியில் உள்ள குரு தட்சிணாமூர்த்திக்கு நேற்று காலை, 9:00 மணிக்கு, 108 சங்காபிேஷகம், நவ கலச ஆவாகன பூஜை செய்யப்பட்டது.மதியம், 12:00 முதல், 1:00 மணி வரை நடந்த சிறப்பு பரிகார யாக பூஜையில் திரளான பக்தர்கள், பெயர், ராசி, நட்சத்திரம் கூறி சங்கல்பம் செய்து பரிகார பூஜையில் பங்கேற்றனர். 1:00 மணிக்கு மேல் மகா பூர்ணாஹூதியுடன் பரிகார பூஜை நிறைவடைந்து அதில் வைத்து பூஜித்த புனிதநீரால் குரு பகவானுக்கு அபிேஷகம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. சங்கல்பம் செய்து கொண்டவர்களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த கயிறு, பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் தட்சணாமூர்த்திக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது. காவடி பழநியாண்டவர் கோவிலில் சிறப்பு ஹோமம் நடந்தது. சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரம் தட்சிணாமூர்த்தி கோவிலில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள், பரிகார பூஜை செய்து வழிபட்டனர். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்தனத்தால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர். ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் தட்சிணாமூர்த்திக்கு, 16 வகை அபிஷேக பூஜை நடந்தது. அதேபோல் மாவட்டம் முழுதும் உள்ள சிவன் கோவில்களில், தட்சிணாமூர்த்தி, நவகிரகத்தில் உள்ள குரு பகவான் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்