உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி

கைதிகளுக்கு விளையாட்டு பயிற்சி

சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு வாலிபால், கேரம் விளையாட்டுக்கான, 4 வார கால பயிற்சி நேற்று தொடங்கப்பட்டது.இதுகுறித்து சிறை எஸ்.பி., வினோத் கூறியதாவது: இந்திய ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் மாநில அளவில் சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரந்தோறும், 5 நாள் என, 4 வாரத்தில் பயிற்சி அளித்து, இறுதிநாளில் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் கைதிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஆயில் கார்ப்பரேஷன் மண்டல தலைவர் கிரண்குமார், சேலம் மாவட்ட மேலாளர் நிகில்நக்கா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ