உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

விளையாட்டு விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சேலம்: விளையாட்டு விடுதிகளில், மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் அறிக்கை: பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர், விளையாட்டு துறையில் சாதனை புரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பயிற்சி, தங்குமிடம், உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்படுகின்றன.பள்ளி மாணவர் விளையாட்டு விடுதி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்பட, 17 இடங்களிலும், மாணவியர் விடுதி, 13 இடங்களிலும் உள்ளன. அதில் சேர, 7-, 8, 9, பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் விளையாட்டு விடுதி சேர்க்கை தேர்வு, மே, 10, மாணவியருக்கு, மே, 11ல் சேலம் காந்தி மைதானத்தில் நடக்க உள்ளது.முதன்மை நிலை விளையாட்டு மையங்களுக்கு நேரடி மாநில அளவில் தேர்வு போட்டி, 6, 7, 8-ம் வகுப்புகளில் படிப்போருக்கு மே, 7ல் சென்னையில் நடக்க உள்ளது.விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தடகளம், கால்பந்து, கபடி உள்ளிட்ட தேர்வு போட்டிகள் நடக்க உள்ளன. மைய சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை, ஏப்., 26(நேற்று) முதல், wwwsdat.tn.gov.inமற்றும் tntalentsdatin என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை, மே, 8 மாலை, 5:00 மணி வரை பதிவேற்றம் செய்யலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும். தகவலுக்கு, 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி