உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் அசத்தல்

அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவர்கள் விளையாட்டு போட்டியில் அசத்தல்

சேலம்: சேலம் விநாயகா மிஷன் பல்கலை, உறுப்பு கல்லுாரிகள் இடையே விளையாட்டு போட்டிகளை, இருபாலர் பிரிவில் நடத்தின. பெண்கள் பிரிவில் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை மாணவியர், ஒட்டுமொத்த ரன்னர் அப் கோப்பையை வென்றனர். ஆண்கள் பிரிவிலும் பல்வேறு பதக்கங்களை வென்றனர்.இதுகுறித்து துறை டீன் செந்தில்குமார் கூறியதாவது: எங்கள் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வியோடு அவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த, சிறந்த பயிற்சியை அளித்து மாநில போட்டிகளில் ஈடுபடுத்தி வருகிறோம். சமீபத்தில் எங்கள் பல்கலை மூலம் கல்லுாரிகள் இடையே நடத்திய போட்டிகளில் பெண்கள் அணி, ௨௭ தங்கம், ௫ வெள்ளி, ௨௯ வெண்கல பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த, 'ரன்னர் அப்' கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் அணி, ௧௦ தங்கம், ௨௪ வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு பயிற்சி அளித்த துறை உடற்பயிற்சி இயக்குனர்கள் ஜெயபாரதி, சூர்யாவுக்கு துறை சார்பில் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ