உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறுபத்து மூவர் உலா பக்தர்கள் தரிசனம்

அறுபத்து மூவர் உலா பக்தர்கள் தரிசனம்

சேலம், : சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அறுபத்து மூவர் திருவீதி உலாவையொட்டி, நேற்று காலை, 63 நாயன்மார்களின் திருமேனிகள், சிலைகளுக்கு சிறப்பு அபிேஷகம், பூஜை நடந்தது.தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இரவில் சுகவனேஸ்வரர் கோவிலில் தொடங்கிய அறுபத்து மூவர் திருவீதி உலா, அக்ரஹாரம், தேர்வீதி, இரண்டாம் அக்ரஹாரம், பட்டைக்கோவில், சின்னக்கடை வீதி, பெரிய கடை வீதி, கன்னிகா பரமேஸ்வரி கோவில் வழியே வந்தது. வழிநெடுக திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருவெம்பாவை பெருவிழா கழக நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ