உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் கீழே விழுந்து பலி

நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் கீழே விழுந்து பலி

தலைவாசல்: நாய் குறுக்கே வந்ததால், பைக்கில் சென்ற லாரி டிரைவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.தலைவாசல் அருகே, மணிவிழுந்தான் வடக்கு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிவா, 22. லாரி டிரைவரான இவர் கடந்த, 15ல், இரவு, 8:30 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் தலைவாசல் நோக்கி சென்றார். அப்போது, சாலையை கடந்து சென்ற நாய் மீது, பைக் மோதியதில் தடுமாறியபடி சென்ற சிவா, கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். ஆத்துார் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நி-லையில் நேற்று அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசா-ரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை