உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டப்பகலில் 16 பவுன் திருட்டு

பட்டப்பகலில் 16 பவுன் திருட்டு

சேலம் : சேலம், இரும்பாலை அருகே பெருமாம்பட்டியை சேர்ந்த, மணிகண்டன் மனைவி ராதிகா, 23. இவர் நேற்று காலை, 11:30 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகே உள்ள சகோதரரின் வீட்டுக்கு சென்றார். மதியம், 2:00 மணிக்கு திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த, 16.4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !