உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மண் கடத்தியவருக்கு காப்பு டிப்பர் லாரி பறிமுதல்

மண் கடத்தியவருக்கு காப்பு டிப்பர் லாரி பறிமுதல்

நங்கவள்ளி;சேலம் புவியியல், சுரங்கத்துறை துணை இயக்குனர் பன்னீர்செல்வம் நேற்று அதிகாலை, தாரமங்கலம் - நங்கவள்ளி பிரதான சாலை, வனவாசி பிரிவு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, 3 யுனிட் செம்மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, ஆவணம் இன்றி கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து பன்னீர்செல்வம் புகார்படி, நங்கவள்ளி போலீசார், டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, பெரியசோரகை செங்காட்டூரை சேர்ந்த ராஜேந்திரன், 56, செந்தில், 32, மீது வழக்குப் பதிந்தனர். இதில், செந்திலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி