உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தக்காளி கிலோ ரூ.40 ஆக சரிவு

தக்காளி கிலோ ரூ.40 ஆக சரிவு

ஆத்துார், சேலம் மாவட்டம் ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி, கல்வராயன்மலை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. கோடை மழையால், தக்காளி செடிகளில் இருந்த பழங்கள் அழுகி கொட்டின. இதனால் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட், ஆத்துார், தம்மம்பட்டி, வாழப்பாடி உழவர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்து அதன் விலை கிலோ, 90 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால் இரு நாட்களாக, தக்காளி வரத்து கணிசமாக உயர்ந்து வருவதால் அதன் விலை குறைந்து வருகிறது. நேற்று தலைவாசல் மார்க்கெட்டில் தக்காளி கிலோ, 40 ரூபாயாக சரிந்தது. வெளிமார்க்கெட்டில் கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ