உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விமான போலி டிக்கெட் விவகாரம் பயணியர் விழிப்புடன் இருக்க அறிவுரை

விமான போலி டிக்கெட் விவகாரம் பயணியர் விழிப்புடன் இருக்க அறிவுரை

ஓமலுார்:மதுரை விமான நிலையத்தில் இருந்து நேற்று அயோத்திக்கு பயணம் செய்ய வந்த, 106 பேரின் டிக்கெட், 'போலி' என கண்டுபிடிக்கப்பட்டதால், அவர்கள் விமானத்தில் பயணிக்க, அனுமதி மறுக்கப்பட்டது. அந்த டிக்கெட்டுகள் அனைத்தும் தனியார் ஏஜன்டுகள் மூலம், 'புக்கிங்' செய்யப்பட்டது என தெரியவந்துள்ளது. ஒரு டிக்கெட் விலை, 9,800 ரூபாய். இதுகுறித்து சேலம் விமான நிலைய போலீசார், அதிகாரிகள் கூறியதாவது:ஏஜன்டுகளிடம் டிக்கெட் புக்கிங் செய்யும் போது, அதன் உண்மை தன்மையை பயணியர் கண்டறிய வேண்டும். அந்த டிக்கெட்டில் உள்ள பி.என்.ஆர்., எண் மூலம், அந்த விமான நிறுவன வெப்சைட்டில், 'டிக்கெட் ஸ்டேட்டஸ்' மூலம் நாம் பயணிக்கும் நாள், நேரம், ஒதுக்கப்பட்ட இருக்கை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும். அதனால் பயணியர் டிக்கெட் புக்கிங் செய்யும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ