உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இன்று முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி

இன்று முதல் கால்நடைகளுக்கு தடுப்பூசி

சேலம்: சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் இணைந்து இன்று முதல், 30 வரை, 5வது சுற்று கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்கு இலவசமாக போடும்பணி நடக்கிறது.கோமாரி நோய், இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல், கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோய். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், பண்ணைக்கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவும். இந்த கொடிய நோயை தடுக்க, 6 மாதத்துக்கு ஒருமுறை அனைத்து மாட்டினம், எருமை இனங்களுக்கு தடுப்பூசி இலவமாக போடப்படுகிறது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், ஊராட்சிகளில் உள்ள கால்நடை மருந்தகங்களில், 149 குழுக்கள் மூலம் தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி போட்டு பயன்பெறலாம் என கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை