உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம் லோக்சபா தொகுதிக்கு 129 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை

சேலம் லோக்சபா தொகுதிக்கு 129 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை

சேலம்: சேலம் லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை கடந்த ஏப்.,19ல் நடந்தது. தொகுதியில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, கருப்பூர் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணும் மையத்தில் இன்று காலை, 8:00 மணிக்கு துவங்குகிறது. 345 ஓட்டுச்சாவடிகள் கொண்ட ஓமலுார் சட்ட சபை தொகுதிக்கு மொத்த சுற்றுகளின் எண்ணிக்கை, 25. 321 ஓட்டுச்சாவடிகள் கொண்ட இடைப்பாடி தொகுதிக்கு, 23 சுற்றுகள், 297 ஓட்டுச்சாவடிகள் கொண்ட சேலம் மேற்கு தொகுதிக்கு, 22 சுற்றுகள், 263 ஓட்டுச்சாவடிகள் கொண்ட ‍சேலம் வடக்கு தொகுதிக்கு, 19 சுற்றுகள், 241 ஓட்டுச்சாவடிகள் கொண்ட சேலம் தெற்கு தொகுதிக்கு, 18 சுற்றுகள், 299 ஓட்டுச்சாவடிகள் கொண்ட வீரபாண்டி தொகுதிக்கு, 22 சுற்றுகள் என ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. உதவி தேர்தல் நடத்தும் அலுலருக்கு ஒரு மேஜை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் எழுதப்பட உள்ளது.1,300 போலீசார் பாதுகாப்புஓட்டு எண்ணும் மையம், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மையத்தின் உள்ளே, வெளியே என மாநகரம் மற்றும் மாவட்ட போலீசிலிருந்து, 1,308 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.* சேலம் லோக்சபா தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பாட்டீல், சேலம் தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி ஆகியோர் நேற்று ஓட்டு எண்ணும் மையத்தை பார்வையிட்டனர். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 14 டேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு, 6 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம், 18 சுற்றிலிருந்து அதிகபட்சமாக, 25 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஓட்டு எண்ணும் மையம் முழுவதும், 314 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 1,500 தேர்தல் அலுவலர்கள் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ளனர்.ஆய்வின் போது, சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், சேலம் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, டி.ஆர்.ஓ.,மேனகா உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி