உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மகளிர் வாலிபால் போட்டி வீரபாண்டி அணி முதலிடம்

மகளிர் வாலிபால் போட்டி வீரபாண்டி அணி முதலிடம்

வீரபாண்டி, பனமரத்துப்பட்டி குறுமைய அளவில், பாரதியார் தின விளையாட்டு போட்டி 17, 14 வயதுக்குட்பட்ட மகளிர் வாலிபால் போட்டிகளில், வீரபாண்டி அரசுப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது.பனமரத்துப்பட்டி குறுமைய அளவில், மகளிர் வாலிபால் போட்டி, நேற்று வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வீரபாண்டி அரசுப்பள்ளி முதலிடம், சாலோம் கான்வென்ட் பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.இதே போல், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியும், தாசநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியும் மோதியது. இதில் வீரபாண்டி பள்ளி முதலிடம் பிடித்தது. நேற்று நடந்த இரண்டு போட்டியிலும், வீரபாண்டி அரசுப்பள்ளி முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை