உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலி

பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலி

ஆத்துார்:சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே கடம்பூர், அரசு கோவில் காட்டை சேர்ந்த தனசேகரன், 42, தன் தோட்டத்தில், 'மணி பயர் ஒர்க்ஸ்' என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்துகிறார். அங்கு, நான்கு கிடங்குகளில் வெடி மருந்துகளை வைத்துள்ளார்.நேற்று மாலை, 4:00 மணிக்கு, மூலப்பொருட்களை எடுக்க, கூலமேட்டை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், 45, சென்ற போது, தீப்பற்றி நாட்டு வெடிகள் வெடித்தது. ராஜமாணிக்கம், 200 மீட்டர் துாரத்திற்கு துாக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். அந்த கட்டடம் முழுதும் இடிந்து தரைமட்டமானது. மற்றொரு கட்டடம் சேதம் அடைந்தது.அங்கு பணியில் இருந்த, கடம்பூரை சேர்ந்த விஜயா, 34, வித்யா, 40, அங்கம்மாள், 45, சித்ரா, 38, உரிமையாளர் தனசேகரன், 42, ஆகியோர் படுகாயமடைந்தனர்.ஆத்துார் போலீசார் ராஜமாணிக்கம் உடலை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆம்புலன்சை வழிமறித்த அவரது உறவினர்கள், ஆத்துார் - கடம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை