உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

ஏற்காடு மலர் கண்காட்சி மேலும் 4 நாட்கள் நீட்டிப்பு

சேலம்,:சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 47வது கோடைவிழா, மலர் கண்காட்சி கடந்த, 22ல் தொடங்கியது. தினமும் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை, மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 26ம் தேதி வரை, மலர் கண்காட்சி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.சுற்றுலா பயணியர் வருகை அதிகரிப்பு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையால், மலர் கண்காட்சியை மட்டும், வரும், 30ம் தேதி வரை நீட்டித்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். விழாவை சிறப்பாக நடத்த உதவிய அலுவலர், பணியாளர்களை பாராட்டி, ஏற்காடு ஏரி பூங்காவில் இன்று மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் கலெக்டர் பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை