உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 17 ஊராட்சி செயலர் பணிமாறுதல் உத்தரவு; ரத்து செய்யக்கோரி பி.டி.ஓ.,விடம் மனு

17 ஊராட்சி செயலர் பணிமாறுதல் உத்தரவு; ரத்து செய்யக்கோரி பி.டி.ஓ.,விடம் மனு

ஆத்துார் : ஆத்துார் ஒன்றியத்தில் உள்ள, 20 ஊராட்சிகளில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், 17 ஊராட்சி செயலர்களை கடந்த, 14ல், ஆத்துார் பி.டி.ஓ., பணி மாறுதல் செய்து உத்தரவிட்டார்.இந்நிலையில் நேற்று, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், ஆத்துார் ஒன்றிய பி.டி.ஓ., வெங்கட்ரமணனிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: ஆத்துார் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வரும், 17 ஊராட்சி செயலர்களை, பணி மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, தமிழக அரசின் கனவு இல்லம் கணக்கெடுப்பு, குடிநீர் பிரச்னை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிமாறுதல் உத்தரவு காரணமாக, இப்பணிகள் தேக்கமடைவதுடன், மன உளைச்சலும் ஏற்படும்.அரசு திட்டங்கள் செயல்படுத்துவதில், சேலம் மாவட்டம் முன்னேற்றமான நிலையில் உள்ளபோது, இந்த உத்தரவு பின்னடைவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகும். பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்வதுடன், அவற்றை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ